search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.எஸ். பயங்கரவாதி"

    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 ஆயிரம் பேர் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு ராணுவத்திடம் சரணடைந்தனர்.
    மாஸ்கோ:

    சிரியாவில் அரசுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரும் அதே வேளையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு காலூன்றி கடும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.

    அதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் களம் இறங்கியது. அதன் மூலம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்து அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டன.

    எனினும் டெயிர் எஸ் ஜோர் மாகாணத்தில் உள்ள பாகுஸ் கிராமம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதையும் அவர்களிடம் இருந்து மீட்க அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து, சிரிய ராணுவம் அங்கு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இதற்கிடையில், முழுக்கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டதால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு ராணுவத்திடம் சரணடைந்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரிய ராணுவ வீரர்களிடம் சரணடைந்தனர்.
    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் சிரிய ஜனநாயக படையினர், குர்து இன போராளிகள் என மொத்தம் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். #Syria
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் ஒருபுறம் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.அங்கு ஈராக் எல்லையில் டெயிர் அல் ஜோர் நகரையொட்டிய பகுதிகளில் 4 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர்.

    சிரிய ஜனநாயக படையினருடன் அமெரிக்க கூட்டுப்படைகள் இணைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்றும், சனிக்கிழமையன்றும் சிரிய ஜனநாயக படையினருக்கும், குர்து இன போராளிகளுக்கும் எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் சிரிய ஜனநாயக படையினர், குர்து இன போராளிகள் என மொத்தம் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இங்கிலாந்தை சேர்ந்த சிரியா மனித உரிமை கண்காணிப்பகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
    ×